
அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணியின் தந்தையும், பாமக நிறுவனருமான ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும் கட்சியைக் கைப்பற்றுவதற்காக அன்பமணி பம்மாத்து வேலைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று விழுப்பரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் நிறுவனர் ராமதாஸ்க்கு வழங்கி குழு அனுமதி அளித்துள்ளது.
பாமகவின் தலைவர் அன்புமணி கிடையாது. நாங்கள் தொடுத்த வழக்கில் அவருக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை என்பதை தேர்தல் ஆணையமும், டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தி உள்ளது.



