பெருகி வரும் மக்கள் அழுத்தமே காரணம் – ராகுல் காந்தி!

Advertisements

புதுடெல்லி:

மணிப்பூரில் முதல் மந்திரி பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பா.ஜ.க. முதல் மந்திரி பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாகச் சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.

இதற்கிடையே, மணிப்பூர் முதல் மந்திரி பைரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கினார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பெருகி வரும் மக்கள் அழுத்தம், சுப்ரீம் கோர்ட் விசாரணை மற்றும் காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகியவற்றால் முதல் மந்திரி பைரன் சிங்கின் ராஜினாமா செய்துள்ளாரெனப் பதிவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *