
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி தொடங்கி வைத்து உங்களுடைய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
தமிழகத்தில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தைமுதல்வர் மு.க.ஸ்டாலின்இன்று கோவையில் தொடங்கி வைத்தார்..

அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் கெல்லீஸ் சாலையில் செயல்பட்டு வரும் மாதிரி பள்ளிக்கூடத்தின் வளாகத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்..
அதோடு வாலாஜாபேட்டை, ஆற்காடு, அரக்கோணம், ஆகிய இடங்களில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் முகாமை அமைச்சர் ஆர் காந்தி நேரில் சென்று பார்வையிட்டதோடு வருகை தந்த அனைத்து பொதுமக்களின் மனுக்கள் மற்றும் புகார்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள்.

