Sri Parthasarathy Perumal Temple: சிறப்பு தரிசனம் ரத்து!

Advertisements

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்றும் படிப்படியாக தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்களிலும் விழா பண்டிகை காலங்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

2023-ஆம் ஆண்டில் ஜனவரி 2 மற்றும் டிசம்பர் 23 என இரண்டு வைகுண்ட ஏகாதசிகள் வருகின்றன. அந்த வகையில் மார்கழி மாதமான டிசம்பர் 23-ஆம் தேதி வர கூடிய வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோயிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

பின்னர் காவல்துறை, மெட்ரோ குடிநீர், மாநகராட்சி, மருத்துவம், மின்சாரவாரியம், உள்ளிட்ட துறை அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு;“கடந்த ஆண்டு 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சொர்க்க வாசல் திறப்பு விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 முதல் 20% வரை  அதிகமாக மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கோயிலுக்கு முன்புறம் பொது தரிசனமும், பின்புறம் சொற்க வாசல் தரிசனமும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகள், முதியவர்களுக்கு டிபி கோயில் சாலை (பின்புற வாசல்) வழியாக சிறப்பு தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக 6 சிறப்பு மருத்துவ முகாம்களும், தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்று சுற்று பணியாக 400-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி அன்று இக்கோயில் நடை திறக்கும் காலை ஆறு மணி முதல் அன்றையதினம் நடை முடப்படும் வரை சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற கோவில்களிலும் பண்டிகை மற்றும் விழா காலங்களில் படிபடியாக சிறப்பு கட்டண தரிசனம் நிறுத்த வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மற்றும் அறநிலையதுறையின் எண்ணம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த நான்கு மாதமாக பௌர்ணமி நாளன்று சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்தத் திட்டம் நல்ல பயன் அளிப்பதால் மற்ற திருக்கோவிலிலும் விழா மற்றும் பண்டிகை காலங்களில் இந்த சிறப்பு தரிசன முறையை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பொது தரிசனத்தில் தரிசிக்க செல்லும் பக்தர்கள்  வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதால் விழா காலங்களில் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது”, என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *