Israel-Hamas Conflict: சர்வதேச ஊடக அமைப்புக் கண்டனம்!

 பத்திரிகையாளர்கள்மீது நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச ஊடக அமைப்புக் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல் லெபனான் மீதும் நடத்தப்பட்டது. மற்றும் சிரியாவின் 2 விமான நிலையங்கள்மீதும் தாக்குதல் நடந்தது. லெபனானில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் வீடியோ நிருபரான இசாம் அப்துல்லா என்பவர் கொல்லப்பட்டார். இஸ்ரேலிய படைகள் மற்றும் லெபனான் பயங்கரவாத அமைப்பான ஹிஜ்புல்லா இடையேயான சண்டையில் அவர் கொல்லப்பட்டு உள்ளார். இதுதவிர, பத்திரிகையாளர்கள் 6 பேர் காயமடைந்தும் உள்ளனர். இதற்குச் சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இதுபற்றி அல் ஜசீரா ஊடகம் வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் பீரங்கியின் குண்டுவீச்சு தாக்குதலாலேயே அப்துல்லா கொல்லப்பட்டார். பத்திரிகையாளர்கள் என்பதற்கான மேலாடையை அணிந்திருந்தபோதும், பல்வேறு நிருபர்கள்மீது இஸ்ரேல் படைகள் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளன எனக் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்தத் தாக்குதலில் அல் ஜசீராவின் 2 நிருபர்கள் காயமடைந்து உள்ளனர். ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் செய்தி நிறுவனம் தன்னுடைய 2 நிருபர்கள் தாக்குதலில் காயமடைந்து உள்ளனர் எனத் தெரிவித்து உள்ளது.

இதே போன்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனமும், கூடியிருந்த பத்திரிகையாளர்கள்மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதல் நடந்தது எனத் தெரிவித்து உள்ளது. அப்துல்லா லைவ் வீடியோ பதிவை வழங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டாரென ராய்ட்டர்ஸ் தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *