
உடலுக்கு ஆற்றலும், ஆரோக்கியமும் கொடுக்கும். அடிக்கடி வைத்துச் சாப்பிட்டால் நல்லது.
முருங்கைக் கீரை மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு கீரை. இதில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளன. முருங்கையின் கீரை மட்டுமல்லாமல் அதன் பூவையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட உடல் பலம் அதிகரிக்கும். எலும்புகளும், பற்களும் வலிமை பெற உதவும். கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களிலிருந்து விடுபட முருங்கைக்கீரை உதவுகிறது. முருங்கைக்கீரையில் ஈர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் முருங்கைக்கீரை மிகவும் நல்லது. பொரியல், கூட்டு மட்டுமல்லாமல் பல்வேறு ரெசிபிக்களும் செய்யலாம். அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தால் சாதாரண தலைவலியில் தொடங்கி இருமல், சளித்தொல்லைகளிலிருந்து விடுபடலாம். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 தேக்கரண்டி
வர மிளகாய் – 4
வரமல்லி விதைகள் – 2 தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்ன வெங்காயம் – 10
தேங்காய்த் துருவல் – ஒரு தேக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
முருங்கைக்கீரை – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளிக்கரைசல் – ஒரு கப்
செய்முறை:
*ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், மிளகு, சீரகம், வர மிளகாய், வரமல்லி, சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், தேங்காய்த் துருவல் என அனைத்தையும் வதக்கி ஒரு தட்டில் கொட்டி உலர விட வேண்டும், பின்னர் சூடு ஆறியவுடன் இதனை அரைத்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
*ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கிக் குழைந்தவுடன், நாம் எடுத்து வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
* இறுதியாக, அரைத்த மசாலாவையும், புளிக்கரைசலையும் சேர்த்து நன்றாகப் பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். மிகவும் சுவையான முருங்கைக் கீரை புளிக்குழம்பு தயார். இதைச் சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதற்குத் தொட்டுக்கொள்ள அப்பளம், வத்தலே போதுமானது.


