Overqualified Housewives – சிறந்த வாய்ப்பு…!

Advertisements

கிராமப்புறங்களை விட நகர்ப்புற இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. 2021-22 புள்ளிவிவரங்களின் படி, நகர்ப்புறங்களில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 24% தான். பொருளாதாரத்தில் பெண்களுக்கு அதிக ஊதியம் தரும் வேலைகள் உருவாக்கமை, சமூகப் பாதுகாப்பு இல்லாமை (Gender Parity Index) இதற்கு முக்கிய காரணம் – பெண்களுக்குப் பொருத்தமான வேலை என்ற பேரில் குறைவான ஊதியம் பெரும் இடத்திலே பெண்களை வைக்கிறது. இதன் காரணமாக, பெண்கள் தொழிலாளர்களாக இருக்க விருப்பம் இல்லாமல் வீட்டு வேலைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இதுக்குறித்து சங்கரி சுதர் கூறுகையில்,” Overqualified House Wives” idea சின்ன வயசுல இருந்தே ஏதையாச்சும் சாதிக்கனும்கிற எண்ணம் உண்டு.ஆனா, இது இந்ததுறையின் எதையும் முடிவு பண்ணல படிச்சு முடிச்சு IT லச்சேர்ந்தேன்.மூன்று வருடத்திற்கும் மேலாக IT ல வேலைப்பார்த்தாலும் எந்தத் திருப்தியையும் கிடைக்கல அதே சமயத்துல எனக்குத் திருமணமும் ஆகிருச்சு.திருமணமானதும் ஒரு ஆர்வத்தோட அந்த வாழ்கைக்குள்ள போனேன் ஆனா போக, போக நமக்கான உரிமைகளை இழந்திருவோமோன்னு பயம் வந்துருச்சு.அந்த நேரத்துல WFH ரொம்பபரிட்சையமா இருந்ததால அப்போ தோனுன ஐடியா தான் ‘Overqualified House wives’.எங்க வீட்டுலையும் தொடக்குதுல எதிர்ப்பு தான், கணவர் கூடச் சப்போர்ட்டா இருந்ததால இதைச் செய்ய முடிஞ்சுது.

வேலைக்கு ஆட்கள் தேடுற கம்பெனிகளுக்கும்  வேலை தேடுற பெண்களுக்கும் நடுவுல தான்  நாங்க இருக்கிறோம். தகுதியான நிறுவனத்திற்கு தகுதியான ஆட்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பது தான் இதோட நோக்கம்.இதுவரைக்கும் 700 கம்பெனிகளும், 1000 பெண்களும் இதன்மூலமாகப் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், Content writer, graphic designer, HR, Business deveolpmentபோன்ற வேலைகளுக்கு அதிகப்படியான Startupநிறுவனங்கள் பதிவு பண்ணிருக்காங்க. இங்க வேலை  தேடி Apply பண்ற பெண்களுகும் இதுல ஏதாச்சும் ஒரு வேலையைதான் தேடிக்கிட்டு இருப்பாங்க.மாதம் 8 ஆயிரம் தொடங்கி 60 வரைக்கும் இங்க சம்பளம் வாங்குறாங்க.ஒவ்வொருத்தருடைய படிப்பு, அனுபவத்திற்கேற்ப சம்பளத்தை கம்பெனிகளே முடிவு பண்றாங்க.  கிராமப்புறங்கள்ல வேலை இல்லாமல் இருக்குறபெண்களுக்கு சுய தொழில் தொடங்க பல்வேறு திட்டங்கள் அரசின் சார்பாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் வேலை இல்லாமல் இருக்கும் பெண்களை அரசு ஒருங்கிணைக்க வேண்டு மென்று நினைக்கிறீர்களா?
“கிராமம், நகரம்னு பிரிக்காம எல்லாருக்குமான  வாய்ப்பை உருவாக்கி கொடுக்கனுங்கிறதுதான்எங்களோட இலக்கு. அரசு நிறைய திட்டங்கள் கொண்டு வரத்தான் செய்யுறாங்க நம்மலும் அதுக்கு ஒத்துழைழைச்சு ஒருங்கிணைந்தால் நிச்சயம் நினைச்சத செய்ய முடியும்.  முழுநேரபணியோ & வீட்டிலிருந்து பணியோ குடும்பத்தின் ஆதரவு முக்கியமா? இருந்தும் கூடச் சில குடும்பங்கள் வீட்டிலிருந்து பணி செய்ய ஒத்துழைப்பு தர்றதில்ல.
இப்படியான சூழல்லஇருக்குற பெண்கள் என்ன செய்யனும்?
கண்டிப்பா நினைச்சத அடையுற வரை போராடத்தான்  செய்யனும். அவகங்களையும் சமாதானப்படுத்திவேலை செய்யும் சூழலுக்குள்ள போறப்போ நிம்மதியா இருக்கும். முதல்முறையா அவங்க ஈட்டுக்கிற பணம் அவங்களுக்கும் அவங்கள சுத்தியுள்ளவங்களுக்கும் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்

இல்ல, ரெண்டு சூழலையுமே சிக்கல் இருக்கு  வீட்டில் ரெண்டு பேரு வெளிய வேலைப்பாத்துட்டு வந்தா ஆண்கள் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம் ஆனாபெண்கள் கிட்சனுக்குள்ள போயி ஆகனும். கண்டிப்பா இதுப் போன்ற மனஉளைச்சலுக்கு தேவையான கவன்சிலிங் தருவது குறித்தும் App உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். மாவட்டங்கள் தோறும் நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செஞ்சுக்கிட்டு வர்றோம் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் பத்து லட்சம்பேரை சென்றடைவதே இலக்கு என்று நம்பிக்கையோடுகூறுகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *