புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் குறித்து புலம்பல் – துரை வைகோ

Advertisements

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த திருச்சி எம்பி துரை வைகோ ரயில் நிலையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இங்கிலிஷும் தமிழும் தெரியாததால் எந்த பாஷையில் பேசுவது என்று தெரியாமல் தடுமாறிய எம்பி இப்படிப்பட்ட அலுவலர்களை ரயில் நிலையத்தில் நியமித்தால் எப்படி பொதுமக்கள் கூறும் கோரிக்கையை கேட்பார்கள் என எம்பி புலம்பல் மேலும் ரயில் நிலையத்தில் உடைந்து கிடக்கும் கழிப்பிட வசதி தண்ணீர் இல்லாமல் பூட்டி கிடந்த கழிப்பிட கட்டடங்களை அதிரடி ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் தினந்தோறும் அதிகளவில் பயனாளிகள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வார்கள் ரயில் நிலையத்தில் பல வருடங்களாக குடிநீர் கழிப்பிட வசதி கேண்டீன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பயனாளிகள் பெறும் சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் இதனை அறிந்த திருச்சி மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று திடீரென புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஆய்வு செய்வதற்கு வருகை தந்தார் அப்பொழுது ரயில் நிலையத்தில் இருந்த அதிகாரி மற்றும் அலுவலர்களிடம் ஆய்வு செய்ய செல்கின்றேன் யாராவது என்னுடன் வாருங்கள் என ஆங்கிலத்தில் எடுத்துக் கூறிய பொழுது அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை தமிழும் தெரியாது தான் ஆய்வுக்கு வந்த முதல் நாளை இப்படியா என நொந்து கொண்டு ஹிந்தி மட்டும் தெரியும் இவர்களை பணியில் அமர்த்துவதால் பொதுமக்கள் கூறும் குறைகளை எப்படி இவர்கள் கேட்பார்கள் என அவர்களிடம் கேள்வி எழுப்பி ஒரு வழியாக ஆங்கிலத்தில் புரியவைத்து ஆய்வுக்கு அழைத்துச் சென்றார்.

மேலும் பயணிகள் தங்கும் ஓய்வறையை திடீரென ஆய்வு செய்த பொழுது ஓய்வறையில் தூசி படிந்து சுத்தம் செய்யாமல் கிடந்தது ஓய்வறையில் உள்ள கழிவறையில் எந்த வசதியும் இல்லாமல் அசுத்தமாக கிடந்ததால் இப்படி இருந்தால் எப்படி பொதுமக்கள் பயன்படுத்துவார்கள் என அலுவலர்களுக்கு டோ சிட்டார் மேலும் பல வருடங்களாக பூட்டி கிடந்த கழிவறையை திறக்கச் சொல்லி உள்ளே சென்ற பொழுது எந்த கழிவரையிலும் சுத்தம் செய்யாமல் ஆட்டு புழுக்கைகள் கொட்டி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதை ஏன் இப்படி வைத்திருந்தீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அலுவலர்களை தொலைத்தெடுத்தார். மேலும் ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு செய்து ரயில் நிலையத்திற்கு வந்த பொது மக்களிடம் அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார் . அரசுத் துறையிலேயே மிகவும் கடுமையாக வேலை செய்யும் துறை காவல் துறை தான் ஆனால் பொதுமக்கள் காவல்துறையை தப்பாக பேசுவார்கள் காவல்துறையின் கஷ்டம் எனக்கு புரியும் என்றும் காவல்துறையினிடம் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *