பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து புகைப்படம் எரிப்பு .!

Advertisements
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் உள்ள டி என் புது குடியில் பெண்களை இழிவாக பேசும் அமைச்சர் பொன்முடி மற்றும் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசி வருகின்ற திமுக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்றஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க கோரியும் இதை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி மாவட்ட செயலாளர் சத்திய தீபக்   தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் இணை செயலாளர் சண்முகப்பிரியா அவை தலைவர் மூர்த்தி பொருளாளர் சண்முகையா வாசுதேவ நல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் துறையப்பா மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் கந்தசாமி பாண்டியன் தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநெல்வேலி மண்டல செயலாளர் சிவஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர். அப்போது  மாவட்ட மகளிர் அணி செயலாளர் சத்யா தீபக் பேசியதாவது பெண்களை இழிவாக பேசி மன்னிப்பு என்ற வார்த்தையில் முடிந்து போய் விட்டதா ஏன் இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் உள்ள பெண்களை இழிவாக பேசிய பொன்முடியை பதவியில் இருந்து நீக்காத இந்த விடியாத திமுக அரசின் கையாலாகாத தனத்தை சுட்டிக்காட்டி ஏன் இந்த திமுக அரசு முன்வந்து ஏன் ராஜினாமா செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசிய வீடியோ ஆதாரங்களை வைத்து ஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியும் இதுவரை அமைச்சர் பொன்முடி மீது எந்தவிதமான வழக்கும் பதியவில்லை ஆனால் சாதாரண மக்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைகின்றனர் இந்த அரசு தங்களுக்காகவே செயல்படுவதாகவும் மக்களுக்காக எந்தவித திட்டங்களையும் இவர்கள் செயல்படுத்தவில்லை எனவும் ஆகவே தமிழக மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து எடப்பாடி அறை முதலமைச்சராக இந்த நேரத்தில் நாம் உறுதியேற்போம் என பேசினார்  ஆர்ப்பாட்டத்தில் பொன்முடியின் உருவப் படத்திற்கு மகளிர் அணியினர் தங்களது செருப்புகளைக் கொண்டு அடித்தும் கிழித்து எறிந்தனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *