Today rasipalan:இன்றைய ராசிபலன்:11/08/2024.

Advertisements

மேஷம்


குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவர விசாவிற்கு விண்ணப்பம் செய்வர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டுகளிலும் பயிற்சி எடுப்பர். தங்கள் பிள்ளைகளைப் படிப்பதற்காக அவர்கள்மேல் அக்கறை செலுத்துவர். காதல் கசக்கும். வீட்டில் சுப காரியம் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

ரிஷபம்


விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

மிதுனம்


நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் பேச்சை மதிப்பார்கள். தெய்வீகப் பணிகளில் மனம் நாடி அதில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

கடகம்


வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்குவர். அரசு டென்டர் போன்றவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். வீட்டில் இன்பம் பொங்கும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

சிம்மம்


இது நாள்வரை பிரச்சினை செய்து கொண்டிருந்த தங்கள் எதிரிகள் தங்களிடம் மண்டியிடுவர். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கோபப்ப்படாதீர்கள். கூடுமானவரை பொறுமையைக் கையாள்வது நல்லது. உத்யோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

கன்னி


சில நபர்களுக்குப் புதிய ஏஜென்சி கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. திருமணப் பேச்சு வார்த்தை இனிதே நிறைவேறும். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். பெண்கள் கணவர் வீட்டாரிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

துலாம்


மாணவர்களின் நினைவாற்றல் கூடும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தின் மேல் கவனம் கொள்வது நல்லது. தேக ஆரோக்கியம் சிறக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களைச் சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

விருச்சிகம்


ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் கருநீலம்

தனுசு


அரசியல்வாதிகளுக்குப் புகழ், கவுரவம் உயரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. பயணங்களின்போது செல்போன் பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மகரம்


தொழிலுக்கு வங்கிக் கடன் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மாணவர்கள் படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் பாராட்டுவர்.

அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்

கும்பம்


சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

மீனம்


தம்பதிகளிடையே அன்பு பெருகும். வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர். ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள். இரவில் நீண்ட தூர பயணத்தைத் தவிர்க்கவும். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *