Malavika Mohanan: கிளாமருக்கு கொஞ்சமும் குறை வைக்காதா மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற டாப் அணிந்துகொண்டு எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுகுறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் இந்தி சினிமாவிலும் கவனத்தினை ஈர்த்த நடிகையாக உள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் இந்தியில் யுத்ரா படமும் தங்கலானின் இந்தி பதிப்பும் வெளியானது.

மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் அறிமுகமானார்.

அதன் பின்னர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். பேட்ட படத்தில் நடித்திருந்தாலும், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தபோதுதான் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார்.

தற்போது தமிழ், மலையாளம் மற்றும் இந்தியென அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகின்றார். படத்தின் கதைக்குக் கவர்ச்சி தேவைப்படுகின்றது என்றால் அதற்கு உடனே ஓ.கே. சொல்வது மட்டுமில்லாமல், அதனைச் சிறப்பாகவும் நடித்துக் கொடுக்கின்றார்.

அண்மையில் இந்தியில் வெளியான யுத்ரா படத்தில் தாறுமாறான கவர்ச்சியால் இந்தி திரையுலகையே கலக்கிவிட்டார்.

இவர் தான் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிரும் பழக்கம் கொண்டவர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 4.2 மில்லியன் ரசிகர்கள்பின் தொடருகின்றனர்.

இவர் தற்போது வெள்ளை நிற டாப் அணிந்து கொண்டு அட்டகாசமான போஸ்கள் கொடுத்துப் புகைப்படங்கள் எடுத்துத் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *