
தமிழகத்தின் கடனளவு ரூபாய் 13 புள்ளி 18 லட்சம் கோடியாக உள்ளது எனவும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூபாய் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன் உள்ளது என்றும், வெள்ளை அறிக்கையில் நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவுப்படி, தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் பணியை, நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் தலைமையிலான நிதித்துறை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் வெளியிட்டார். அதில், தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு ரூபாய் 13 புள்ளி 18 லட்சம் கோடியாக உள்ளது, தமிழக அரசின் மொத்த கடனளவில் ரூபாய் 10 லட்சம் கோடி நேரடி கடனாக உள்ளது என்றும், எஞ்சிய ரூபாய் 3 புள்ளி 18 லட்சம் கோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகையாக உள்ளது என்றும், கடந்த 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூபாய் 5 லட்சம் கோடி எனவும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூபாய் 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன் உள்ளது என்றும் வெள்ளை அறிக்கையில் அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை 2 புள்ளி 25 சதவீதத்திலிருந்து 2 புள்ளி 22 சதவீதமாக மோசமடைந்துள்ளது எனவும், தமிழத்தில் 2021-ஆம் ஆண்டு ரூபாய் 46 ஆயிரத்து 538 கோடியாக இருந்த வருவாய்ப்பற்றாக்குறை, 2026-ஆம் ஆண்டு ரூபாய் 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பு மீறி அதிகரித்துள்ளது எனவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச்செலவீனம் குறைந்துள்ளது எனவும், வருவாய்ப்பற்றாக்குறை 2026-ஆம் ஆண்டு ரூபாய் 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது எனவும்,
அறிக்கையில் அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார். மேலும். தமிழகத்தின் மொத்த வருவாய் வரவில் வட்டி செலவீனம் 22 புள்ளி 8 சதவீதமாகவும், தமிழகத்தில் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64 புள்ளி 4 சதவீதமாகவும், கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் அளவு 14 புள்ளி 3 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் பற்றாக்குறை 2 புள்ளி 2 சதவீதமாக உள்ளது எனவும், குஜராத், மராட்டியம், கர்நாடகாவை விட தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக குறைவாக உள்ளது எனவும், அறிக்கையில் நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.



