“நீட் மறுதேர்வு அணுகுமுறை பேராபத்து” – அண்ணாமலை எச்சரிக்கை!

நீட் மறுதேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள அணுகுமுறை, புதிய சிக்கல்களை உருவாக்க வழிவகுக்கும் என்று நாம் தலைவர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் மறுதேர்வில் வினாத்தாள் கசிவைத் தடுக்க மத்திய அரசின் கல்வி அமைச்சகம் எடுக்கும் முயற்சிகளை ஒவ்வொரு மாணவரும் பாராட்டுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன்னதான கூடுதல் சோதனைகள், ஒட்டுமொத்தத் தேர்வு நேரத்தை 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரிப்பது ஆகியன மாணவர்களின் மன அழுத்தத்தை மேலும் கூட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது நமது தேர்வு முறையின் ஒட்டுமொத்த நோக்கத்தையும், தேர்வு மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான தேசியக் கல்விக்கொள்கையின் இலக்கையும் சிதைக்கும் என்று தெரிவித்துள்ளார். நீட் மறுதேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள இந்த அணுகுமுறை பிரச்சினையைத் தீர்க்காது என்றும், மாறாகப் புதிய சிக்கல்களை உருவாக்க வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *