
இஸ்ரேல்- ஈரான் இடையேயான போரை மத்தியம்சம் செய்ய தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் 7வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், இஸ்ரேல் டெஹ்ரானையும், ஈரான் டெல் அவிவ் நகரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் போர் விமானங்களை குவித்து வருகிறார்.
இந்நிலையில், இஸ்ரேல், ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்ய தயார் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பு பிரச்னைகளை தீர்க்கவும், ஈரான் அமைதியாக அணுசக்தி திட்டங்களை தொடர்வதற்கும் பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக கூறியுள்ளார். புதினின் இந்த பதிலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தும்படி டிரம்ப் கூறியாதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




