நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாகச் சென்னையில் பிராமணர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக நடிகை கஸ்தூரியின் வீட்டிற்கு போலீஸார் சென்றிருந்த நிலையில், நடிகை கஸ்தூரி வீட்டின் பின்பக்கமாகத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் நடிகை கஸ்தூரி தலைமறைவான நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது இன்று நவம்பர் 14ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *