Puducherry: எனக்குக் காரே வேண்டாம்.. அரசுக் காரை ஒப்படைத்த MLA!

Advertisements

புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபையில் கடந்த 22-ந் தேதி இடைக்கால கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது எம்.எல்.ஏ., க்கள் அனைவரும் அரசு காரில் வந்து இறங்கினர்.

ஆனால் திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன் மட்டும் தனது உதவியாளரின் பைக்கில் வந்து கலந்து கொண்டார்.அரசு கொடுத்த கார் அடிக்கடி பழுதாகி விடுவதால் தனது வீடான செல்லிப்பட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டுச் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தாகத் தெரிவித்தார்.

மேலும் தனக்கு புதிய காரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.ஆனாலும், அவருக்குப் புதிய கார் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அதிருப்தியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் காரைச் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தைச் சந்தித்து கார் சாவியை கொடுத்துக் காரை ஒப்படைத்தார். கடந்த 2 நாட்களாகத் தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார். இதுகுறித்த அங்காளன் எம்.எல்.ஏ., கூறியதாவது:-

எனக்குக் கொடுக்கப்பட்ட அரசுக் கார் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அந்தக் காரைப் பட்டி பார்த்துப் புதிய கார்போல் என்னிடம் வழங்கினர்.ஆனால் கார் எங்குப் போனாலும் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது.

இதேபோல் மற்ற எம்.எல்.ஏ., க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது. ஆனால் எனக்குக் காருக்கு டீசல் போடப் பணம் தருவதில்லை. காரின் ஆவணங்களையும் வழங்கவில்லை. இதனால் எனக்குக் காரே வேண்டாம் என்று சபாநாயகரை சந்தித்து சாவியுடன் ஒப்படைத்துவிட்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *