Ganapathy: காங்கிரஸ், NR காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி இல்லை.. பாமக விமர்சனம்!

Advertisements

காங்கிரஸ், NR  காங்கிரஸ், திராவிட கட்சி ஆட்சிக்கு வந்து புதுச்சேரி மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை, நகரப் பகுதியில் 3 பஞ்சாலைகளும் மூடிக்கிடக்கிறது, இன்றைக்கு புதுச்சேரி நகரம் வளர்ச்சி சம்பந்தமாக அரசாங்கம் திட்டமிடல் இல்லாததால் நகரபகுதி பொலிவிழுந்து காணப்படுகிறது என்று பாமக மாநில அமைப்பாளர் கணபதி குற்றம்சாட்டியுள்ளார்.

நடைபெற்ற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சி நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். கட்சி தலைமை அலுவலகம் கவுண்டம்பாளையம்தாய் வீட்டு உள்ளரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு பாமக மாநில அமைப்பாளர் கோக்கணபதி சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு சந்திப்பது என ஆலோசனைகள் வழங்கினார்கள், இக்கூட்டத்தில்  நகரத் தலைவர் தமிழ்ச்செல்வன்  தலைமை தாங்கினார்கள் நகர செயலாளர் இளவரசன் முன்னிலை வகித்தனர், நகர துணை தலைவர் ராமதாஸ், நகர துணை செயலாளர் சரவணன் வரவேற்றார்கள்.

அப்பொழுது மாநில அமைப்பாளர் கணபதி அவர்கள் பேசியதாவது புதுச்சேரி மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவில் நகரப் பகுதியில் பாமக வேகமாக வளர்ந்து வருகிறது, நகரப் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் சுவர் விளம்பரம் மூலை முடுக்கெல்லாம் எல்லாம் நம்முடைய கட்சி கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கிறது, கிராமப் பகுதியை மிஞ்சுகின்ற வகையிலே இங்கு இருக்கின்ற நிர்வாகிகள் ஒற்றுமையோடு மிகச் சிறப்பாகக் களப்பணி ஆற்றுகிறார்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நகரப் பகுதியில் உள்ள 13 தொகுதிகளில் நாம் கணிசமான வாக்குகளைப் பெற்று தர வேண்டும் அதற்கு  இன்று முதல் தீவிரமாகத் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும்,

நகர பகுதியில் ஒரு சில பூத்துகளில் நியமிக்கப்படாமல் உள்ள பூத் ஏஜெண்டுகளை மிக விரைவில் நியமனம் செய்ய வேண்டும், காங்கிரஸ், NR  காங்கிரஸ், திராவிட கட்சி ஆட்சிக்கு வந்து புதுச்சேரி மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை, நகரப் பகுதியில் 3 பஞ்சாலைகளும் மூடிக்கிடக்கிறது இன்றைக்கு புதுச்சேரி நகரம் வளர்ச்சி சம்பந்தமாக அரசாங்கம் திட்டமிடல் இல்லாததால் நகரபகுதி பொலி விழுந்து காணப்படுகிறது கடுமையான போக்குவரத்து நெரிச்சல் செப்பநிடப்படாமல் சாலைகள், இப்படி மாநிலம் பாழ்பட்டு அழிந்து வருகிறது இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று சொன்னால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் அந்த வகையிலே நகரப் பகுதி மிகச் சிறப்பாகக் கட்சிப்பணி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும் தொடர்ந்து நாம் மருத்துவர் அய்யா, சின்ன அய்யா அவர்களின் கொள்கைகளையும் நாம் போராடி பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீடுகளைப் பற்றியும் நகரந்தோறும் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,

உடன் மாநில துணை அமைப்பாளர் வடிவேல் கவுண்டர், வன்னியர் சங்க தலைவர் துரை ஜெயகுமார் பொருளாளர் நரசிம்மன் இளைஞர் சங்க செயலாளர் பிரதீப் குமார், சேதுபதி ஹேமச்சந்திரன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் தாபா சோமசுந்தரம், மண்டல செயலாளர் செய்யாள், ஊடக பேரவை செயலாளர் செல்வம், துணை செயலாளர் சேகர், சந்தோஷ், தொழில் சங்க செயலாளர் கிருஷ்ண தேவன், தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணி, இளம் பெண்கள் மகளிர் அணி செயலாளர் ஏபிள் இளவரசன், மகளிர் சங்க செயலாளர் ஜோதி பிரியா, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சத்யானந்தம் தொகுதி தலைவர்கள் செயலாளர்கள் துரைக்கண்ணு ஹரிதாஸ் ஜெயச்சந்திரன் சிவா, மணிகண்டன், சரவணன், பன்னீர் செல்வம் உட்பட கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் உட்பட நூற்றிக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *