Mandaikadu Bhagavathi Amman Temple: மாசி கொடைவிழா நாளைக் கொடியேற்றத்துடன் துவக்கம்!

Advertisements

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை பெருந்திருவிழா நாளைக் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

இன்றே கேரள பெண் பக்தர்களின் வருகையால் பொங்கல் வழிபாடுகளும் சந்தனக்கூட ஊர்வலங்களும் நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் இரு மாநில அரசுகளும் சிறப்புப் பேருந்துகள் மண்டைக்காட்டிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படுகின்றன –

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகின்ற கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற முக்கிய விழாக்களில் மாசி மாதம் பெருந்திருவிழா 10 நாட்கள் வெகுவிமர்சியாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் மாசி பெருந்திருவிழா நாளைக் காலை 7:30 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவுகாண ஏற்பாடுகளை இந்து அறநிலை துறை மற்றும் இந்து சேவா சங்கத்தினர் இணைந்து செய்து வருகின்றனர். நாளைக் கொடியேற்று தொடங்க இருக்கும் நிலையில் இன்றே கேரளாவிலிருந்து ஏராளமான பெண் பக்தர்கள் வருகை தந்து பொங்கல் வழிபாடுகளைத் தொடங்கியுள்ளனர்.

அதே போன்று சந்தனக்குட ஊர்வலங்களும் இன்று நடைபெற்று வருகிறது. கொடை விழாவை முன்னிட்டு இரு மாநில அரசுகளும் குமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கும் திருவனந்தபுரத்திலிருந்து குமரி மாவட்டம் மண்டைக்காட்டிற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பத்து நாள் திருவிழாவில் எட்டாம் தேதி இரவு 11:30 மணிக்கு வலிப்படுகை நிகழ்ச்சியும் 12-ம் தேதி இரவு 12:30 மணிக்கு ஒடுக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இதே போன்று தினசரி கணபதி ஹோமம், உஷா பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், உச்சிக்கால பூஜை ,மாலை தங்க தேர் உலா வருதல் எனப் பத்து நாட்களும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற உள்ளன. பாதுகாப்பு வசதி கருதி ஏராளமான போலீசார் இன்று மாலை முதல் குவிக்க காவல்துறை தயாராகி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *