Kadambadi: செங்கல்லால் தாக்கியதில் வாலிபர் பலி!

Advertisements

குடும்ப பிரச்சினையின்  காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் பலியானார்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி இருளர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 30), கூலி வேலை செய்பவர். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ஏழுமலை என்பவருடன் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

இதன் காரணமாக இருதரப்பினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, அடிதடி ஆனது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை அருகில் கிடந்த செங்கல்லால் குமாரை தாக்கினார். இதில் தலையில் அடிபட்டு மயக்கமடைந்த குமாரை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

வழியிலேயே குமார் உயிரிழந்தார். மாமல்லபுரம் போலீசார் ஏழுமலையை கைது செய்து, அவர்மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *