Advertisements

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து தனது சமூக வளத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவில், காலை உணவுத் திட்டத்தில், கீழ் 20 இலட்சத்து 59 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் பசியாறுவார்கள் என்றும். தொடர்ந்து காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்கின்றோம்.
இதனை வருகின்ற 26 ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் பஞ்சாப் முதல்வர் தொடக்கி வைக்க உள்ளார் என்றும். இதன் மூலம் நகர்ப்புறம் சார்ந்த 2 ஆயிரத்து 429 பள்ளிகளில் 3 இலட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர் என்றும். மேலும் நமது திராவிட அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகின்றோம் எனத் தெரிவித்தார்.
Advertisements


