Manmohan Samal: பேச்சுவார்த்தையில் இழுபறி.. தனித்து களம் இறங்கும் பா.ஜனதா!

Advertisements

மூன்று நாட்கள் பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுடன் ஒடிசா மாநில பா.ஜனதா தலைவர் சமால் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. 21 தொகுதிகளைக் கொண்ட மக்களவைக்கும், 147 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கும் ஒன்றாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

2009-க்கு பிறகு நவீன் பட்நாயக் பா.ஜனதாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது.

இரு கட்சி தலைவர்களும் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் கூட்டணி முடிவாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் இழுபறி நீடிப்பதாகத் தெரிகிறது. இதனால் பா.ஜனதா தனித்து போட்டியிட தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

147 சட்டமன்ற இடங்களில் 100 இடங்களுக்கு மேல் பிஜு ஜனதா தளம் போட்டியிட விரும்புகிறது. ஆனால் பா.ஜனதா அதிக இடம் கேட்கிறது.

அதேவேளையில் 21 மக்களவை இடங்களில் 14-ல் பா.ஜனதா போட்டியிட விரும்புகிறது. பா.ஜனதாவின் இந்தக் கோரிக்கையை ஏற்க பிஜு ஜனதா தளம் மறுத்துவிட்டது.

மூன்று நாட்கள் பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுடன் ஒடிசா மாநில பா.ஜனதா தலைவர் சமால் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின் அவர் கூறுகையில் “கூட்டணிகுறித்து பேசவில்லை. ஒடிசா தேர்தலில் பா.ஜனதா தனித்து களம் இறங்க போகிறது. டெல்லியில் வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றம் தேர்தலுக்கான எங்களுடைய தயார் நிலைகுறித்து ஆலோசனை நடத்தினோம். தொகுதி பங்கீடு குறித்து ஏதும் பேசவில்லை. எங்களுடைய பலத்துடன் தனியாக நிற்போம்” என்றார்.

கடந்த மக்களவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களிலும், பா.ஜனதா 8 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *