
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். காதலர்கள் மட்டுமல்லாமல், பலரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
இந்தச் சூழலில், நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தனது காதல் அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
‘காதல் ஒழிக’… இன்றைய அரசியலில் தவிர்க்க முடியாத கர்ஜனை நண்பர் சீமான் இயக்கத்தில் நான் நடிக்கவிருந்த படம், இது கால் நூற்றாண்டுக்கு முன் இதே நாளில் வைக்கப்பட்ட தலைப்பு. படம் வெளியானாலும், நட்பு ஒருவரை ஒருவர் ரசிக்கும் விதத்தில் தொடர்கிறது. என் சில கவிதைகளை அவர் மேடையில் பாராட்டும்போது, அந்தக் கவிதைகளில் உள்ள கருத்துக்கள் புதிய தளிர்களை உருவாக்குகின்றன. நானும் ஒரு ஒலியாக மாறுகிறேன்.
‘என் இதயத்தில் அவள் அடித்து விட்டுச் சென்ற ஆணியில் கூட அவள் புகைப்படத்தைதான் மாட்டி விட்டிருக்கிறேன்’ என என் நண்பர் ஒருவர் எழுதியதைப் போல….
போன வருடம்
போன காதல்
வேறு பூமியில்
வேர் பிடித்துப் பூத்துக் குலுங்கும்.-அது
புரியாத-இன்னும்
பிரியாத -உயிர்வரை
பிரிந்திடாத ஒரு
காதலை
‘காதல் ஒழிக’ என
இக்காதலர் தினத்தில்
கொண்டாடும்!- புதிதாய்
பூத்தவர்கள்
பூத்தரேக்குலு (pootharekhulu) சுவைத்து
கொண்டாட்டும்,
தோத்தவர்கள்
காத்திருங்கள்…………………..
அவளை/அவனை
சுமந்து கர்ப்பமான இதயத்தில்
கன்றாவி கவிதையாவது பிறக்கலாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா காதல் உய்க்கும் – பின்
பொய்க்கும்.
