தன்னை வெட்ட வந்தவரை, அவர் எடுத்து வந்த அரிவாளால் வெட்டி படுகொலை செய்த இளைஞர் தனியார் மருத்துவமனையில் அரிவாளுடன் சென்று சிகிச்சைக்காக சேர்ந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி திருவிக நகரை சேர்ந்தவர் குடுமி லோகேஷ் என்ற கண்ணியப்பன் வயது (28). கண்ணியப்பன் இரவு சுமார் 10 மணியளவில் தனது தெருவில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தபோது, திடீரென மூன்று இருசக்கர வாகனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் வந்தகூறப்படுகிறது. இதனை அடுத்து கண்ணியப்பனை அரிவளால் தலையின் பின்புறம் பயங்கரமாக வெட்டி உள்ளனர். இதில் கண்ணியப்பனுக்கு தலையில் லேசான வெட்டு விழுந்தது.
பின்னர் சுதாரித்து கொண்ட கண்ணியப்பன் அரிவாளை பிடிங்கி தன்னை வெட்ட வந்த நபரை சரமாரியாக வெட்டியதில், அடையாளம் தெரியாத நபர் சம்பவம் இடத்திலேயே கழிவு நீர் கால்வாயில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அதனை தொடர்ந்து படுகாயமடைந்த நபர் அரிவாளுடன் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமைக்கு சென்று சிகிச்சைக்கு சேர்ந்தார்.
மேலும் படுகொலை குறித்து, தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கொலை செய்யப்பட்ட கத்தி மற்றும் கொலையாளிகள் எடுத்து வந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் யார்? எதற்காக கன்னியப்பனை வெட்ட வந்தார். பட்டாசு வெடிப்பதில் தகராறா?. இல்லையெனில் ஏற்கனவே முன் விரோதம் உள்ளதா என்ற கோணத்தில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதில் தாக்குதல் செய்ததால் தான் இந்த கொலை நடைபெற்றதா அல்லது இருவருக்கும் மோதல் ஏற்பட்ட பிறகு இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியது என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயம் அடைந்த கன்னியப்பன் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.