Advertisements

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு ஏன்? ஸ்டாலினுக்கு தெரிந்த ரகசியம்? அதிமுக முக்கிய புள்ளியால் பரபரப்பு !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் வீட்டில் இன்று அதிகாலை ஆறு மணி முதல் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதன் பின்னணியில் ஏராளமான பரபரப்பு அரசியல் செய்திகள் இருக்கின்றன
இதுபற்றி விரிவாக விவரிக்கிறது உங்கள் ஜெம் தொலைக்காட்சியின் சிறப்பு புலனாய்வு குழு.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஐ பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை ஆறு மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள் பத்துக்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் ஐந்து அதிகாரிகள் திண்டுக்கல்லில் உள்ள ஐ பெரியசாமி வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஐ.பெரியசாமியின் திண்டுக்கல் வீடு மட்டுமல்லாது சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லம் சென்னையில் ஐ. பெரியசாமியின் மகன் செந்தில்குமாரின் எம் எல் ஏ விடுதி அறை உள்ளிட்ட பல இடங்களில் ஒரே சமயத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.இது மட்டுமல்லாமல் திண்டுக்கல்லில் உள்ள ஐ பெரியசாமி மகன் ஐபி செந்தில்குமார் வீடு மதுரையில் பெரியசாமி மகள் இந்திராவின் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தத் தகவல் தீயாகப் பரவிய நாளையில் ஏராளமான திமுகவினர் அமைச்சர் வீட்டு முன்பு குவிந்து வருகிறார்கள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து அவரது ஆதரவாளர்கள் ஐ. பெரியசாமி வீட்டை நோக்கிப் படையெடுத்தவண்ணம் உள்ளனர்
தொண்டர்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களைத் துப்பாக்கி ஏந்திய போலீசார் கட்டுப்படுத்தி வருகிறார்கள் .இது மட்டுமல்லாமல் அமலாகத்துறை அதிகாரிகளைக் கண்டித்து திமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே ஐ பெரியசாமி வீட்டில் அமலாக்க துறைகள் அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனை நடத்துவது ஏன் என்பது பற்றிய தகவலும் தெரியவந்துள்ளது .கடந்த திமுக ஆட்சியின்போது வீட்டு வசதி துறை அமைச்சராக ஐ பெரியசாமி பணியாற்றி வந்தார் அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியின் பாதுகாவலராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் செயல்பட்டு வந்தார் அவருக்குச் சட்டவிரோதமாக வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாகப் புகார் எழுந்தது இந்தச் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்த புகாரின் பேரிலேயே இப்பொழுது சோதனை நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது
இது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் பத்திர பதிவு உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைச்சராக இருந்தார்ஐ. பெரியசாமி அப்பொழுது பத்திர பதிவு தொடர்பாகச் சில புகார்கள் எழுந்தன இது தொடர்பாகவும் தற்பொழுது சோதனை நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். ஐ.பெரியசாமி தற்பொழுது உடல்நலம் ஒத்துழைக்காததால் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவதால் மற்ற அமைச்சர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்
முன்னதாக மாவட்ட செயலாளர் கூட்டம் மற்றும் தமிழக அமைச்சரவை கூட்டம் ஆகியவற்றை முடித்துவிட்டு முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை அழைத்து எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் ஈடி மற்றும்ஐடி ரெய்டுகளை சந்திக்கும் நிலை வரலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.இங்கிலாந்து செல்லத் தயாராக இருந்த நிலையில் அவர் பேசும்போது
நான் வெளிநாடு செல்லத் தயாராகும் நிலையில் அதற்கு முன்பே ரெய்டு நடக்கலாம் அல்லது நான் வெளிநாடு போனபிறகும் இந்த ரெய்டு நடக்கலாம் நமது தேர்தல் பணிகளை முடக்கி வைக்க வேண்டும் என்பதற்காக இதுபோல் அதிரடி சோதனை நடத்துவார்கள் என எச்சரித்து இருந்தார் என்பது முக்கிய செய்தியாகப் பார்க்கப்படுகிறது
முக்கிய தலைவர்கள் வீட்டில் ஏதாவது ரெய்டு நடக்கலாம் என்று ஏற்கனவே மு.க ஸ்டாலின் எச்சரித்த ஒரு சில நாட்களிலேயே தற்பொழுது ஐ பெரியசாமி வீட்டில் ரெய்டு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .இதற்கிடையே முக்கிய அரசியல் திருப்பம் ஒன்றும் இந்த நிகழ்வோடு சேர்த்து அரங்கேறி இருக்கிறது.அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான சுப்புரத்தினம் திடீரென ஐ பெரியசாமி வீட்டுக்கு விரைந்துள்ளார்
பழனி சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் வழக்கறிஞருமான சுப்பு ரத்தினம் திடீரென அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டு வாசலில் துணை மேயர் ராஜபாபு உடன் அமர்ந்திருந்தார். இவர் ஏற்கனவே திமுகவில் இணைய போகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அவர் ஐ பெரியசாமி வீட்டுக்கு வந்தது முக்கிய அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.சுப்புரத்தினம் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எம்எல்ஏவாக இருந்தவர் தொடர்ந்து அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படாத சூழ்நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக மாறினார் பன்னீர் செல்வத்தின் பல வழக்குகளின் நேரில் ஆஜராகி வாதாடியவர் இந்தச் சுப்புரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.அமலாக்கத்துறையின் அதிரடி சோதனைக்கு இடையே சுப்புரத்தினத்தின் வருகை அவர் திமுகவில் இணையப் போவதை உறுதி செய்வதாகச் சொல்கிறார்கள்.
திண்டுக்கல் ஐ பெரியசாமி தொடர்புடைய வீடுகள் அனைத்திலும் இன்று மாலை 6 மணிவரை இந்த அதிரடி சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினர் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

