அண்ணாமலைக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது – தமிழிசை.!

அண்ணாமலைக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அண்ணாமலைக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார். அண்ணாமலை வந்ததால் பாஜக பலமடையவும் இல்லை, அவர் வெளியே சென்றதால் பலவீனம் அடையவும் இல்லை என்று தெரிவித்தார்.

அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள், பொதுநலவாதிகள் என்று விமர்சித்தார். தாமரையில் இருந்து ஒரு இதழை கூட யாராலையும் அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.

புதிய இயக்கத்தில் லட்சம் பேர் இணைகிறார்கள் என்பது தங்களுக்குப் பொருட்டல்ல லட்சியவாதிகள் தங்களுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *