
டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவம் இல்லையென்றால், செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் நாம் முன்னிலையில் இருந்திருக்க மாட்டோம் என்று ஸ்ரீராம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின், செயற்கை நுண்ணறிவு துறையின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றி வரும் ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையில் வகித்து வரும் தனது பொறுப்பிலிருந்து தான் விலகவுள்ளதாக கூறினார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும் புதிய திட்டங்களில் தொடர்ந்து பணியாற்ற உள்ளேன். முதன்முதலாக மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் கீழ் பணியாற்றியதை தான் பெருமைகொள்கிறேன்.
அவருடைய தலைமைத்துவம் இல்லையென்றால், செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் நாம் முன்னிலையில் இருந்திருக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.



