டிரம்ப் அதிரடி பல்டி… இந்தியாவுடன் மீண்டும் நட்பு!

Advertisements
ரஷ்யாவுடன் நட்பு வைத்திருக்கும் இந்தியா உட்பட பல நாடுகளுக்குப் பொருளாதார தடைகளை ஏற்படுத்தும் வண்ணம் அதிபர் ட்ரம்ப் கடந்த காலங்களில் மிகப் பயங்கரமாக நடந்து கொண்டார். தற்பொழுது ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த நிலையில் தலைகீழாக ட்ரம்ப் பல்டி அடித்து உள்ளார் பொருளாதார தடை இல்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார்.
அமெரிக்காவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் இந்தியா அதே சமயத்தில் ரஷ்யாவுடன் ராணுவ தளவாடங்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி போன்ற வணிகத் தொடர்பையும் வைத்திருக்கிறது.இதன் நிமித்தமாகத் திடீரெனக் கோபப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது பொருளாதார தடைகளை ஏற்படுத்தும் வண்ணம் முதல் கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு அடுத்த கட்டமாக 50% வரி விதிப்பு என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய அவரது சந்திப்பு அலஸ்காவில் நேற்று நடைபெற்றது.இதன் பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைகீழாக மாறிவிட்டார்.
தற்பொழுது அவர் இந்தியாவுடன் ஏற்பட்டிருந்த மோதல் போக்கைக் கைவிட்டு விட்டாரெனத் தெரிகிறது. புதினை சந்தித்த பிறகு டிரம்ப் பத்திரிக்கை நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும்பொழுது. ரஷ்ய அதிபருடன் சந்திப்பு மிக நன்றாக நடந்து முடிந்தது இந்தச் சந்திப்புக்குப் பத்துக்கு பத்து மார்க் தரலாம் ரஷ்யா மற்றும் அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு இரண்டாம் நிலை பொருளாதார தடைகளை விதிப்பதை பற்றி உடனடியாக நான் பரிசீலனை செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
இது சம்பந்தமாகப் பரிசீலனை செய்ய இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் அல்லது இன்னும் கூடுதல் காலம்வரை கூட ஆகலாம்
நான் இப்போது இரண்டாம் நிலை பொருளாதார தடைகளை விதித்தால் அது பல நாடுகளுக்கு மோசமான நிலையை ஏற்படுத்தும் என்பதை உணர்கிறேன் எனவே அதுபற்றி இப்போதைக்கு நாங்கள் எதுவும் நினைக்கவில்லை என்னைப் பொருத்தவரை இந்தச் சந்திப்பு மிக நன்றாக நடந்தது என்று கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது ட்ரம்ப் மிகவும் உற்சாகமாக இருந்ததாக அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா எதிர்த்தாலும் ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு உண்டு என்பதில் இந்தியா தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டாம் கட்ட பொருளாதார தடைகளை விதிக்கப் போவதில்லையெனத் தெரிவித்திருப்பது இந்திய அரசுக்கும் இந்தியர்களுக்கும் நல்ல செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *