
விசிகவில் இருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு சமீபத்தில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பனையூர் பாபு திமுகவில் இணைந்தார். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பனையூர் பாபு சால்லை அணிவித்து செங்கோல் வழங்கி வாழ்த்து பெற்றார்.
மேலும், அவருடன் இணைந்து அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



