Pro Kabaddi :புள்ளிப்பட்டியலில் முந்தப் போவது யார்? தமிழ் தலைவாஸ்-குஜராத் ஜெயண்ட்ஸ் மோதல்!

Advertisements

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஐதராபாத்:11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்நிலையில், இந்தத் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்குத் தொடங்கும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்குத் தொடங்கும் 2வது ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தத் தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் உ.பி.யோத்தாஸ் 2வது இடத்திலும், தமிழ் தலைவாஸ் 3வது இடத்திலும், அரியானா ஸ்டீலர்ஸ் 8வது இடத்திலும், குஜராத் ஜெயண்ட்ஸ் 10வது இடத்திலும் உள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *