
போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசு உத்தரவு.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:போக்குவரத்து துறைக்குச் சொந்தமான 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மொத்தமாக 20 ஆயிரத்து 260 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 1.76 கோடி மக்கள் பயணிக்கின்றனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகளையில் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவாகவே உள்ளது. அந்த வகையில் பேருந்து சேவைய தமிழக மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தமிழக அரசின் விடியல் திட்டத்தின் மூலம் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 877 பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் டி.சி.சி. பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


