
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த “அனுஜா” குறும்படம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
2005ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் பரிந்துரைப் பட்டியல் வெளியாகி உள்ளது. ஜனவரி 17ஆம் தேதியே பட்டியல் வெளியாக வேண்டிய நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்காரணமாகக் கால தாமதமாக வெளியாகி உள்ளது.
இதில் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் பிரிவில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள “அனுஜா” குறும்படம் இடம் பெற்றுள்ளது.
“அனுஜா” – பாலக் என்ற இரண்டு சகோதரிகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள்குறித்த கதையை மையமாகக் கொண்டது “அனுஜா” குறும்படம்.
“Emilia Pérez” என்ற ஸ்பெயின் படம் அதிகபட்சமாகச் சிறந்த படம், சிறந்த நடிகை உள்ளிட்ட 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்கர் வரலாற்றில் ஆங்கிலம் அல்லாத மொழிப் படம் அதிக பிரிவுகளில் பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். “Wicked” மற்றும் “The Brutalist” படங்கள் தலா 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 2ஆம் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பிரபல டிவி தொகுப்பாளரான Conan O’Brien விழாவைத் தொகுத்து வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
