
சென்னை:
விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கேரக்டரில் நடித்துப் பிரபலமடைந்த நடிகை விஜே சங்கீதா, நடிகர் அரவிந்த் சேஜுவை காதலிப்பதை அறிவித்திருக்கிறார்.
ஒன்றாகச் சீரியல்களிலும் சினிமாவிலும் நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. பல தம்பதிகள் இந்த வரிசையில் இருக்கிறார்கள்.
அதிலும் சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் ஒன்றாக நடிக்கும்போது காதலித்து திருமணம் செய்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது சங்கீதா மற்றும் அரவிந்த் சேஜு இணைந்து இருக்கிறார்கள்.
விஜே சங்கீதா ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் குறிப்பாகச் சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் இவருடைய கலகலப்பான பேச்சு பலரையும் கவர்ந்திருக்கும்.

அதுபோலச் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார்.
தொகுப்பாளராகப் பரீட்சையமான இவருக்குச் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் பெரிய அளவில் பிரபலத்தைக் கொடுத்தது.
அந்தச் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் பாசிட்டிவ் ஆக நடித்த சங்கீதா பிறகு வில்லியாகக் கூட மாறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் மலர் கேரக்டரில் சங்கீதா நடித்திருந்தார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் அந்தச் சீரியலிலிருந்து விலகுகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டு விட்டுத் திடீரென்று விலகி இருந்தார்.
அவருக்குப் பதிலாக அடுத்த இரண்டாவது சீசனில் வேறொருவர் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவியில் சமீபத்தில் முடிவு அடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கேரக்டரில் சங்கீதா நடித்திருந்தார்.
அழகு சீரியலில் வில்லியாகப் பார்த்த இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதிக்கு நல்ல தோழியாகவும் சிறந்த சகோதரியாகவும் இருந்ததை பலரும் பாராட்டி இருந்தனர்.
அதோடு இவருக்கு நெகடிவை விடவும் பாசிடிவ் அழகாக இருக்கிறது என்றும் பல பாராட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு பிறகு பெரியதாக இவர் எந்தச் சீரியலிலும் தலைகாட்டவில்லை.
இந்த நிலையில் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் கலை கேரக்டரில் நடித்திருந்த அரவிந்த் சேஜுவை தான் காதலிப்பதாக அறிவித்திருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அரவிந்த் கனா காணும் காலங்கள் சீரியல் மட்டுமல்லாமல் youtubeலும் பல வீடியோக்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.



