
பிரபல திரைப்பட நடிகரும் , தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் இன்றூ காளை காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் தீபக் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக முதல்வர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர், அவரது மனைவிக்கும், மகன்களுக்கும் ஆறுதல் கூறினார். கேப்டன் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவரது இழப்பு அரசியல் மற்றும் திரையுலகினருக்கு பேரிழப்பு என்று தெரிவித்த அவர் அவரது ஈடு செய்ய முடியாத இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


