
மேற்கு ஆசிய நிலவரம் குறித்து பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில், பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, அவருக்கும் பஹ்ரைன் மக்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துத்துகளைத் தெரிவித்ததாகக் கூறினார்.
பின்னர், மேற்கு ஆசிய நிலவரம் குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிவித்தார். இதில், வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டித்ததோடு, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வது முக்கியம் என வலியுறுத்தியதாகக் கூறினார். மேலும், கடல்வழிகளைப் பாதுகாப்பாகவும் திறந்தவையாகவும் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, பஹ்ரைனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நன்றியும் தெரிவித்தேன் என குறிப்பிட்டிருந்தார்..



