
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
த.வெ.க., முதல்வர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை, பனைவூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடந்தது. இதில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
கூட்டணிகுறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை விஜய்க்கு வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை நடத்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. திருச்சி அல்லது மதுரையில் 2வது மாநில மாநாட்டை நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.ஜூலை 2வது வாரத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையைத் தொடங்க தீர்மானம்.செப்டம்பர் முதல் டிசம்பவர் வரை விஜய் மக்கள் சந்திக்கிறார்.த.வெ.க., முதல்வர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. த.வெ.க., அறிவிப்பால், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி உறுதி ஆகி உள்ளது.
