Price hike: மதுபானங்களின் விலை உயர்வு!

Advertisements

மதுபானங்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் 40 வரையிலும் புல் பாட்டிலுக்கு ரூ.10 முதல் 90 வரையிலும் உயர்ந்துள்ளது.

திருப்பதி:ஆந்திரா மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியான உடன் தனியாரிடம் இருந்த மதுபான கடைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

கடந்த 4½ ஆண்டுகளில் ஆந்திர அரசுக்கு ரூ.1.10 லட்சம் கோடி மது விற்பனைமூலம் வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர அரசு மதுபான விற்பனையை அதிகரிக்க என்ன செய்யலாமெனப் பல்வேறு கோணங்களில் ஆலோசித்தது.

மேலும் மதுபான விற்பனைகுறித்து கணக்கெடுப்பு நடத்தினர். எந்த வகையான ஆல்கஹால் குடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, பீர் இதில் எதை மதுப்பிரியர்கள் அதிகம் வாங்குகின்றனர் எனக் கணக்கெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுபானங்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் 40 வரையிலும் புல் பாட்டிலுக்கு ரூ.10 முதல் 90 வரையிலும் உயர்ந்துள்ளது.சிலவகை மதுபானங்களின் வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதிகமாக விற்பனையாகும் மதுபாட்டில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விற்பனையாகாத மதுபானங்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்குப் பெரும் வருமானம் கிடைக்கும் விற்பனை அளவு அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *