போதைப்பொருள் மூலம் சம்பாதித்த பணத்தை வங்கி கணக்குகளில் ஜாபர் சாதிக் பணம் செலுத்தியுள்ளார்: அமலாக்கத்துறை!

Advertisements

போதைப்பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் செலுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் ஈடுபட்டுள்ளார் என அமலாக்கத்துறை ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவி்த்து உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக்கூறி அவரை கடந்தாண்டு ஜூனில் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை கடந்தாண்டு ஆகஸ்டில் கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *