Social Activists: பக்கோடா சுட்டு நூதன போராட்டம்!

Advertisements

புதுச்சேரியில் பக்கோடா சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்திய சமூக ஆர்வலர்கள்.

புதுச்சேரி கல்வித்துறையில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நேரடி நியமனத்தில் வயது வரம்பு தளர்வு கோரி இயற்கை மற்றும் கலாசாரப் புரட்சி இயக்கம் மற்றும் சிந்தனையாளர் பேரவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பகோடா சுட்டு விற்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வித்துறை முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விறகு அடுப்பு மூட்டி வாணல் வைத்து எண்ணெயில் பக்கோடா சுட்டு பொதுமக்களுக்குக் கொடுத்து நூதன முறையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

ஆசிரியர் நியமனத்தை அரசு காலங்கடத்தியதால் பலருக்கு வயது அதிகம் ஆகிவிட்டது. அதனால் வயது வரம்பைத் தளர்த்தகோரி அரசுக்குக் கோரிக்கை வைத்து இதை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த நூதனப் போராட்டத்தைச் சமூக அமைப்பில் நடத்தினார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *