இந்தியா மற்றும் உலகிற்கு ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பதை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மேற்கு ஆசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பேசியதாகத் தெரிவித்தார். அப்போது, பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்று, தொடர் முயற்சிகள் இப்பிராந்தியத்தில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்தியா மற்றும் உலகிற்கு ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

