குரு சிங்கின் போதனைகள் பல தலைமுறைக்கு வழிகாட்டும் – நரேந்திர மோடி

குரு கோவிந்த் சிங்கின் வாழ்வும் போதனைகளும் மக்களுக்குப் பல தலைமுறைக்கு வழிகாட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குரு கோவிந்த் சிங் இஸ்லாமிய மதத்துக்கு மாற மறுத்துவிட்டதால் அவர் மகன்களை முகலாயர்கள் கொன்றனர். இந்தத் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் வீரப் பாலகர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், குருகோவிந்த் சிங்கின் பாலகர்கள் நால்வரும் மதம் மாற மறுத்துத் துணிச்சலுடன் உயிர்த்தியாகம் செய்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

மாதா குரு, குருகோவிந்த் சிங் ஆகியோரின் போதனைகள் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நாள் துணிச்சல், நேர்மை, தியாகம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று தெரிவித்துள்ளார்.

அவர்களின் வாழ்வும் சிந்தனைகளும் மக்களுக்குப் வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *