Premalatha Vijayakanth: ரசிகையாக இருந்து கேப்டனை கரம்பிடித்த பிரேமலதா!

Advertisements

நடிகர் விஜயகாந்துக்கும் அவரது மனைவி பிரேமலதாவுக்கும் இடையேயான திருமணம்பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம்.

விஜயகாந்த்துக்கும் பிரேமலதாவுக்கும் கடந்த 1990-ம் ஆண்டுத் திருமணம் ஆனது. இவர்களது திருமணம் கைகூடியதன் பின்னணியை பார்க்கலாம். பிரேமலதாவும் விஜயகாந்தின் தீவிர ரசிகையாம். ஒருகட்டத்தில் விஜய்காந்த் வீட்டிலிருந்து பெண் பார்க்க வருவதாகப் பெற்றோர் கூறியதும் பிரேமலதாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. சந்தோஷம் ஒருபக்கம் இருக்க, பெரிய நடிகர் வீட்டிற்கு பெண் பார்க்க வருகிறார் என்று தெரிந்ததும் பதற்றமும் பிரேமலதாவுக்கு தொற்றிக்கொண்டதாம்.

ஆனால் எளிமைக்கு பெயர்போன நடிகரான விஜயகாந்த், காலில் செருப்பு எதுவும் போடாமல், கழுத்தில் ருத்ராட்ச மாலை, காவி வேட்டி அணிந்து மிகவும் எளிமையாக விஜயகாந்த் தன்னை பெண் பார்க்க வந்ததைப் பார்த்து இம்பிரஸ் ஆகிப்போனாராம் பிரேமலதா. தனது பெற்றோருக்கும் விஜயகாந்தின் எளிமை மிகவும் பிடித்துப் போனதால் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்களாம்.

சினிமாக்காரர்களுக்குப் பெண் கொடுத்தால் பல்வேறு விமர்சனங்களையும் சந்திக்க நேரிடும், அப்படி தான் பிரேமலதாவின் குடும்பத்தினரும் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற இடத்தில் எல்லாம் சினிமா காரனுக்கு ஏன் பொண்ணு கொடுக்குறீங்க எனக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் பிரேமலதாவின் பெற்றோர் அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் விஜயகாந்துக்கு தான் தன் பெண்ணைக் கொடுப்பேன் எனத் தீர்க்கமாக இருந்ததால் அவர்களின் திருமணம் இனிதே நடந்துள்ளது.

விஜயகாந்த், பிரேமலதா ஜோடியின் திருமணத்தைக் கலைஞர் கருணாநிதி தான் முன்நின்று நடத்தி வைத்திருக்கிறார். திருமணத்துக்குப் பின்னர் பிரேமலதா தன்னுடைய மனைவியாகக் கொண்டாடிய முதல் பிறந்தநாளுக்கு வி என்கிற எழுத்துடன் கூடிய டாலர் ஒன்றை பரிசாகக் கொடுத்தாராம் விஜயகாந்த். எத்தனையோ நகைகள் தன்னிடம் இருந்தாலும் தன் கணவர் தனக்கு அளித்த முதல் பரிசைப் பொக்கிஷம்போல் பாதுகாத்து வருவதாகப் பிரேமலதாவே பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *