காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் – நயினார் நாகேந்திரன்

எத்தனை பதிவுகளை இட்டு, பூசி மெழுக முயன்றாலும், காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தலைவர் காமராஜரை அவமானப்படுத்த திமுக பரப்பிய அவதூறுகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும், கேலிச் சித்திரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டாலும் மக்கள் மறக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திப் பேசவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் மழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முரசொலி இதழிலேயே மிகவும் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும்  காமராஜரை இழிவுபடுத்திய கார்ட்டூன்களை மறுக்க முடியுமா? என்றும் அவற்றை நியாயப்படுத்திப் பேச முடியுமா? என்றும் நாகேந்திரன் வினவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *