கரூர் சம்பவம் இதயமே வெடித்து விடும் போல் உள்ளது என செங்கோட்டையன் பேச்சு ..!

Advertisements

கரூர் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது, இதயமே வெடித்து விடும் போல் உள்ளது என்றும், வரும் காலங்களில் இது போன்ற துயரச் சம்பவம் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, கரூர் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது, இதயமே வெடித்து விடும் போல் உள்ளது, அரசியல் வரலாற்றில் இதுபோல சம்பவம் நடைபெற்றது இல்லை, கருரே தண்ணீர் கடலில் சிந்தி கொண்டிருக்கிறது, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், இறந்தவர்கள் அனைவரும் இறைவனடி சேர வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமுடன் வீடு திரும்ப ஆசைப்படுகிறேன் எனவும், வரும் காலங்களில் தமிழக அரசு மற்றும் மக்கள் இது போன்ற துயரங்களை ஏற்படுத்தால்; இருக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *