பூவிருந்தவல்லியில் உள்ள சிந்திக் கல்லூரியில் நவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே வேலப்பன்சாவடி நெடுஞ்சாலையில் உள்ள சிந்திக் கல்லூரியில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கல்லூரிச் செயலாளர் பிரலாஷ் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தார்.
பின்னர், கல்லூரி வளாகம் முழுவதும் தோரணங்கள், வண்ணப் பூக்கள், மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து, பாரம்பரிய பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.
தொடர்ந்து, மாணவர்கள் தெய்வங்களைப் போல உடையணிந்து, கோலாட்டம் நடனமாடி, கொலுவுக்கு பக்திப் பாடல்களைப் பாடினர்.
இந்த நிகழ்ச்சியை தமிழ்செல்வி அழகாக தொகுத்து வழங்கினார். இதில், கல்லூரி முதல்வர் பிரஹலாதன், துணை முதல்வர் ஷோபனா, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


