
திருமணமான புகைப்படத்துடன் பெண் போலீஸ் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பூந்தல்லி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: பூந்தல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(30), என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டுத் திருமணம் நடைபெற்றது.
திவ்யா கர்ப்பமான நிலையில் அவரைப் பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றவர் இதுவரை மனைவியும் குழந்தையும் பார்க்க வரவில்லை எனவும் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகப் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்த நிலையில் திவ்யா தனக்கு திருமணமானபோது எடுத்துக்கொண்ட பெரிய அளவிலான புகைப்படத்தைக் கையில் வைத்தபடி தனது உறவினர்களுடன் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் தனது கணவர் தன்னை பிரிந்து சென்ற நிலையில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும் அதற்கு முன்பாகப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் வைத்தார். இந்த வழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வருவதால் இந்த வழக்கு பூந்தமல்லி உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக மனைவி போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

