‘GOAT:’ விஜய் படத்தின் `ஸ்பார்க்’ பாடலின் புதிய போஸ்டர் வெளியானது!

Advertisements

விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் மூன்றாவது பாடலின் புதிய போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை:நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் இளமையானவராகக் காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டாவது பாடலான ‘சின்ன சின்னக் கண்கள்’ விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் 3வது பாடல் இன்று வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாடலுக்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது. இப்பாடலிற்கு ஸ்பார்க் எனத் தலைப்பிட்டுள்ளனர். பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலி இணைந்து பாடியுள்ளனர். கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர். இந்தப் பாடலில் விஜய் மிகவும் இளமையான தோற்றத்தில் உள்ளார். இதனால் இப்பாடலின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் `ஸ்பார்க்’ பாடலின் புதிய போஸ்டரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *