Pongal Festival: டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

Advertisements

பொங்கல் பண்டிகையையொட்டி ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (புதன்கிழமை) ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இன்று முன்பதிவு செய்வோர் ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி12-ம் தேதி சொந்த ஊர் செல்வோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளைத் தொடங்குகிறது.

டிக்கெட் முன்பதிவு விவரம்:-

* செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 16-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 18-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 19-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *