K. Annamalai: இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை!

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை எல்லாம் விடப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தும் முன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அரசும், நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *