
ராணிப்பேட்டை வாரச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று மணி நேரத்தில் 3 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட போதிலும் இடவசதி இல்லாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வாரசந்தை மைதானத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனையானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காலை 5 மணிக்குத் தொடங்கப்பட்ட ஆடுகள் விற்பனை சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து வாகனங்கள்மூலம் கொண்டு வரப்பட்டு ஆடுகள் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் மூன்று மணி நேரத்தில் 3 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெற்றது.
மேலும்பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விலை கூடுதலாக இருந்தாலும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில் நகராட்சி சார்பில் வாரச் சந்தையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் போதிய இடம் வசதியின்றி ஆடுகள் விற்பனை சந்தைக்கு வருகை தந்திருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
தொடர்ந்து பிற்பகல் 12 மணிவரை நடைபெறும் ஆடுகள் விற்பனை சந்தனையில் சுமார் 4.50 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெறலாமெனச் சந்தை நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


