Kanchipuram Flower Price: பூக்களின் விலை கடும் வீழ்ச்சி!

Advertisements

காஞ்சிபுரத்தில் பூக்களின் வரவு அதிகரித்ததால் பூச்சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகப் பூ வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாட உள்ள நிலையில், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் அமைந்துள்ள பூச்சந்தையில் பூக்களின் வரவு அதிகரித்துள்ளது.

கோயம்பேடுக்கு அடுத்தபடியாகக் காஞ்சிபுரம் பூச்சந்தையை வியாபாரிகள் குறிப்பிடுவது வழக்கம். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் , காஞ்சிபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் நாள்தோறும் பூக்களைக் கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது அதிகளவில் பூச்சந்தைக்குப் பூக்கள் வரவு ஏற்பட்டதால் பூக்களின் விலை சற்று வீழ்ச்சி  சந்தித்துள்ளது.காஞ்சிபுரம் பூச்சந்தையில் மல்லி ரூபாய் 2000,  சாமந்தி 120 ரூபாயும்,  முல்லை ஆயிரம் ரூபாயும்,  ரோஸ் 140 ரூபாயெனத் தற்போது விலை நிர்ணயம் செய்து பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பண்டிகை முன்பு போகி அன்று தான் அதிக அளவில் பூக்கள் விற்பனை இருக்கும் எனவும் என்பதால் தற்போது பூச்சந்தை காலியாக உள்ளது.

இதுகுறித்து பூ வியாபாரி வெங்கடேசன் கூறுகையில் , இன்று பூக்களின் விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் , நாளை மற்றும் மறுநாள் பூக்களின் விலை அதிகரிக்க கூடும் என்பதும் தற்போது காஞ்சிபுரத்திற்கு பூக்கள் வரவு அதிகம் என்பதால் என்று விளையில் சரிவு ஏற்ப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *